படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், சட்டென்று மனதில் நிற்கும் ஒரு கேரக்டர்தான் புஜ்ஜி. புஜ்ஜி வேற யாருமில்லை; பிரபாஸின் நண்பனாக வரும் ஒரு ரோபோட்டிக் கார். சீரியஸான இந்த சப்ஜெக்ட்டில், உர்ரென்று படம் பார்க்கும் ரசிகர்களைக் கொஞ்சமாச்சும் சிரிக்க வைப்பது புஜ்ஜி கார் பேசுவதாக, அதன் பேக்ரவுண்ட் வாய்ஸில் கீர்த்தி சுரேஷ் பேசும் கொஞ்சூண்டு நக்கல் கலந்த டயலாக்குகள்தான்.
‛‛உனக்கு என் மேல Care இருந்தா என்னைச் சீண்டுற அவனுங்களை Dare பண்ணு பைரவா!’’
‛‛இவனை நம்பாதே… அப்புறம் என்னோட ஸ்பேர் பார்ட்ஸ்லாம் கழட்டிப் பிச்சு எறிஞ்சு உனக்குச் செலவு வெச்சுடுவான்!’’
‛‛உன்னோட ஷூவை நீதான் சார்ஜ் போட்டுக்கணும்! உனக்குப் போய் இவ்வளவு பில்டப் கொடுத்தேன் பாரு!’’
‛‛ஃப்ளைட் மோடா? பைரவா, என் ஸ்பீடே இவ்வளவுதான்!’’ என்று பிரபாஸையும், எதிரிகளையும் கலாய்த்துத் தள்ளும் புஜ்ஜியை, நிஜமாகவே படத்தில் ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான கதாபாத்திரமாகவே வடிவமைத்திருக்கிறார்கள்.
GIPHY App Key not set. Please check settings