ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தியும் இந்த மோசடி நடக்கிறது. பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் பெயரை பயன்படுத்தி அவருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மர்ம நபர் ஒருவர், பெண் ரசிகை ஒருவரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்திருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் மினோ வாசுதேவன் என்ற பெண் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து, தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இத்தகவல்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அலிஷா என்பவர் எனக்கு சோசியல் மீடியாவில் அறிமுகமானார். அவர் தன்னை நடிகர் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் பப்ளிக் ரிலேஷன் டீம் மெம்பர் என்று கூறினார். அதோடு சித்தார்த் உயிருக்கு கியாரா அத்வானியால் ஆபத்து இருக்கிறது என்றும், அவரது குடும்பத்தினரை மிரட்டி சித்தார்த்தை கியாரா திருமணம் செய்து கொண்டார் என்றும், சித்தார்த் வங்கிக் கணக்கையும் கியாரா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
எனவே சித்தார்த்தை காப்பாற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார். அதோடு தீபக் துபே என்பவரை அறிமுகம் செய்து இவர் சித்தார்த்தின் மக்கள் தொடர்பு பிரிவு உறுப்பினர் என்று தெரிவித்தார். தீபக் துபே நடிகை கியாரா அத்வானியின் அணியில் இருக்கும் உளவாளி என்று கூறி, ராதிகா என்பவரை சோசியல் மீடியாவில் அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் சித்தார்த்திற்கு பில்லி சூனியம் வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டனர். சித்தார்த் மற்றும் கியாரா இடையே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அடிக்கடி பணம் அனுப்பினேன். இப்படியே என்னிடம் போலி கதைகள் சொல்லி 50 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர்.
லண்டனில் இருக்கும் எனது தோழியிடமும் 10 ஆயிரம் திருடிக்கொண்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள், இது குறித்து போலீஸில் புகார் செய்தீர்களா என்று கேட்டதற்கு, அப்பெண் எந்த வித தகவலும் கொடுக்கவில்லை. ஆனால் எந்த ஐ.டி மூலம் மோசடிப்பேர்வழிகள் அவரிடம் சாட் செய்தனர் என்ற விபரத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings