அதேபோல் பிரதமர் மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் எனது எண்ணங்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவரிடமும் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். குவைத்திலுள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
இன்னொருபக்கம், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவவும், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை நாட்டுக்கு அனுப்பவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய வெளியுறவுத்துறைக்கான இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குவைத் புறப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
GIPHY App Key not set. Please check settings