in

Live: டிஎன்பிஎஸ்சி குரூப் – 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – News18 தமிழ்



April 28, 2023, 8:03 pm IST

டிஎன்பிஎஸ்சி குரூப் – 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
https://www.tnpsc.gov.in/
என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
April 28, 2023, 8:02 pm IST

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு…

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் சந்தித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் மூலம் “விலையில்லா விருந்தகம்” என்ற பெயரில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் முறையை நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். இதனை நடத்தும் முக்கிய நிர்வாகிகளை சிறப்பிக்கும் வகையில் இன்று சென்னையில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்.

April 28, 2023, 7:07 pm IST

கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு – கமல்ஹாசன்

கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். கோவையில் கமல்ஹாசன் அளித்த பேட்டியில் ”இறையாண்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன்” என்று கூறினார். காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறு ராகுல்காந்தி தன்னிடம் பேசினார் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, மக்களவை தேர்தலில் நல்ல முடிவு ஏற்பட இப்போதிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விளம்பரம்
April 28, 2023, 6:54 pm IST

மணிஷ் காஷ்யப் மீது என்.எஸ்.ஏ வழக்கு ஏன்? உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்குக் கேள்வி..

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக மணிஷ் காஷ்யப் மீது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்தது ஏன் என்று தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளிக்கத் தமிழ்நாடு அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து மே 8-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

April 28, 2023, 4:38 pm IST

வெறுப்பு பேச்சு விவகாரம் – உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு அட்வைஸ்

வெறுப்பு பேச்சுகள் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரித் தொடரப்பட்ட வழக்கு கே.எம். ஜோசஸ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அதில், வெறுப்பு பேச்சு விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எந்த மதத்தைச் சார்ந்தவர் என்றாலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாட்டின் மதசார்பற்றத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் புகார் அளிக்கப்படாமலும் மாநில அரசுகள் வழக்குப்பதிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

April 28, 2023, 4:03 pm IST

பல்வீர் சிங் மீதான நடவடிக்கை என்ன? – தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க உத்தரவு..

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்கத் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விளம்பரம்
April 28, 2023, 3:50 pm IST

ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கு – விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

2021 தேர்தலில் வேட்புமனுவில் ஈபிஎஸ் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், மனுதார் மிலானிக்கு உரியப் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

April 28, 2023, 3:14 pm IST

ஆருத்ரா உள்ளிட்ட மோசடிகள் – விரைவில் குற்றப்பத்திரிக்கை

ஆருத்ரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி மோசடி ஈடுபட்ட வழக்கில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.ஜி. ஆசியம்மாள், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆருத்ரா வழக்கில் தேடப்படும் ஆர்.கே.சுரேஷூக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாக ஐ.ஜி தெரிவித்துள்ளார்.

April 28, 2023, 2:55 pm IST

யானை தாக்கி பாகன் பலி – வனத்துறை ரூ.10 லட்சம் நிவாரணம்

முதுமலை யானை வளர்ப்பு முகாமில் யானை தாக்கி பலியான பாகன் பாலனின் குடும்பத்திறு வனத்துறை சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம். மேலும் பாலனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் பேட்டி.

விளம்பரம்
April 28, 2023, 1:25 pm IST

பொன்னியின் செல்வன் 2 – இணையத்தில் வெளியிட தடை

பொன்னியின் செல்வன் 2 படத்தை 3000த்திற்கும் மேற்பட்ட இனையதளங்களில் வெளியிட தடை கோடி லைகா நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இந்த மனுவை ஏற்று இணையதளங்களில் வெளியிட தடை விதித்தார் நீதிபதி சவுந்தர்.

April 28, 2023, 1:07 pm IST

நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கவும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

April 28, 2023, 1:06 pm IST

ஜூன் 5 ஆம் தேதி – தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார்.

விளம்பரம்
April 28, 2023, 12:19 pm IST

நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படவில்லை – அண்ணாமலை மறுப்பு

நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பிரத்யேக பேட்டியில் தமிழ்த்தாய் அவமத்திக்கப்பட்ட விவகாரத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த பேட்டியில் ‘கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் அம்மாநில பாடல் தான் ஒலிபரப்ப வேண்டும் அதுதான் நியதி’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘ஒலி பெருக்கி அமைப்பாளர் தெரியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பிவிட்டார், அதுவும் முழுமையாக இல்லை. இருந்தும் அதை மதித்து நான் எழுந்து நின்றேன்’ என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

April 28, 2023, 11:58 am IST

அடுத்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

அதன்படி, 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கும் எனவும், 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 19ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 18ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார்.

April 28, 2023, 11:55 am IST

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவத்துறை அமைச்சர் மாநில அளவிலான சுகாதார அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் என தெரிவித்தார்.

விளம்பரம்
April 28, 2023, 11:46 am IST

ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு  ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.

April 28, 2023, 11:42 am IST

திமுகவை அச்சுறுத்த முடியாது… உதயநிதி ஸ்டாலின்

ஐடி ரெய்டு நடத்துவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, ”பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோ கூட வெளியானது, அதை யாரும் கேட்பதில்லை.

அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது, அதை யாரும் கேட்பதில்லை, என்னை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள்” என கூறினார். துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அந்த செய்தி பற்றி தெரியாது என தெரிவித்தார்.

April 28, 2023, 11:31 am IST

குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்திபு நடைபெற்றது. அப்போது, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

விளம்பரம்
April 28, 2023, 11:06 am IST

பொன்னியின் செல்வன் -2… தியேட்டர்களில் குறைந்த கூட்டம்..!

திருச்சியில் உள்ள திரையரங்குகளில் இன்று பொன்னியின் செல்வன் படம் வெளியான நிலையில், ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோன்று முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு மேளதாளங்கள் முழங்க மிகுந்த ஆரவாரத்துடன் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நிகழ்வுகள் நடைபெறும், ஆனால் எவ்வித ஆரவாரம் இன்றி திருச்சியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி உள்ளது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெறுமா வரும் நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்குமா என போகப் போகதான் தெரியும்.

April 28, 2023, 10:46 am IST

குடியரசு தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : மருத்துவமனைக்கு மட்டுமே அழைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கவுள்ல நிலையில், கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரசு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கருணாநிதி நினைவாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காகவும் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், மருத்துவமனை திறப்பு விழாவிற்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

April 28, 2023, 10:46 am IST

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கியது..!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

விளம்பரம்
April 28, 2023, 9:46 am IST

தங்கம் சவரனுக்கு ரூ. 160 குறைவு

இன்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.20 என்றும் சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.

April 28, 2023, 9:33 am IST

கோடை கால அமர்வு… உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!

கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

April 28, 2023, 9:13 am IST

நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது…!

நடப்பு கல்வியாண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

விளம்பரம்
April 28, 2023, 9:06 am IST

டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

குடியரசுத் தலைவரை சந்திக்க டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் வரவேற்றனர்.

April 28, 2023, 8:53 am IST

வெளியானது பொன்னியின் செல்வன் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் – 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

April 28, 2023, 7:42 am IST

வேங்கைவயல் – மே 6ஆம் தேதி தனி நீதிபதி விசாரணை

நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் ஓய்வுப்பெற்ற நீதிபதி சத்திய நாராயணா நியமிக்கப்பட்டார்.

இவர் வரும் மே 6ஆம் தேதி நேரில் விசாரணை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
April 28, 2023, 7:01 am IST

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்க நேரில் வருகை தரும்படி குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.  குடியரசுத் தலைவரை இன்று காலை 11.30 மணியளவில் சந்திக்கிறார்.

  • First Published :



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்… வெள்ளை மாளிகை சொல்வதென்ன?!

`இத்தாலியில் பூர்வீகச் சொத்து; புதுடெல்லியில் விவசாய நிலம்!’ – சோனியா காந்தி வேட்பு மனுவில் தகவல் | I have property in Italy: Sonia Gandhi endorsement