in

Modi: தீடீரென மோடியின் கையைப் பிடித்த நிதிஷ் – வைரலான வீடியோ… என்ன நடந்தது? | Nitish Kumar checks PM Modi’s finger for indelible ink mark


பீகார் மாநிலம், பாட்னாவின் ராஜ்கிரில் புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். விழா மேடையில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் அரவிந்த் பனகாரியா உரையாற்ற தொடங்கியபோது மேடையில், பிரதமர் மோடிக்கு அருகில் அமர்ந்திருந்த நிதிஷ் குமார், திடீரென பிரதமர் மோடியின் கைகளைப் பிடித்து ஆள்காட்டி விரலைப் பார்த்தார்.

அதில் வாக்கு செலுத்தும்போது வைக்கப்படும் அழியாத அடையாள மையை பார்த்து ஏதோ சிரித்துக்கொண்டே பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, “மூன்றாவது முறையாக பதவியேற்ற 10 நாள்களுக்குள் நாலந்தாவுக்கு வர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது நல்ல அதிர்ஷ்டம். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இதை ஒரு நல்ல சகுனமாகவும் பார்க்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

`சட்டசபைக்குப் போவோமா… வேண்டாமா..?’ – ஆழ்ந்த யோசனையில் ஓ.பி.எஸ்! | will ops join upcoming tamilnadu assembly session?

T20 World Cup 2024 Super 8 matches west indies ground fans expectation indian batting comeback