‘திருமணம் முடிந்த பிறகு நாங்களே மணமக்கள் போட்டோக்களை அனுப்புகிறோம். அதுவரை பொறுங்கள். நடிகை அது இது என எதையாவது வைரலாக்காதீர்கள்’ என அதில் வேண்டுகோள் வைத்திருந்தார். இந்நிலையில், பிரேம்ஜியை மணக்க இருக்கும் பெண் குறித்து எக்ஸ்க்ளூசிவான சில தகவல்கள் நமக்குக் கிடைத்தன. பிரேம்ஜி குடும்பத்தினருக்கு நெருக்கமான சிலரிடம் இது தொடர்பாகப் பேசிய போது, ”இந்துவின் குடும்பம் சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்டது.
இந்து வங்கி ஒன்றில் வேலை பார்த்துட்டு வர்றாங்க. இந்தக் கல்யாணம் காதல் கல்யாணம்தான். ரெண்டு பேரும் எங்க எப்படி அறிமுகமானாங்கனு தெரியலை. அதேநேரம் இந்துதான் பிரேம்ஜிகிட்ட முதல்ல புரப்போஸ் செய்ததாச் சொல்றாங்க. கொஞ்ச நாள் காதலிச்சவங்க பிறகு வீட்டுல விஷயத்தைச் சொல்ல ரெண்டு வீட்டாரும் பேசி நல்லதொரு முடிவை எடுத்திருக்காங்க” என்றார்கள்.
GIPHY App Key not set. Please check settings