எலக்ட்ரானிக் சிட்டி, ; பெண்ணை கொன்று உடலை எரித்த, மருமகன் கைது செய்யப்பட்டு உள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாலும், மீண்டும் பணம் தர மறுத்ததாலும் தீர்த்துக்கட்டியது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே தொட்டகம்மனஹள்ளியில் வசித்தவர் சுகன்யா, 36. திருமணம் ஆனவர். கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுகன்யா, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர், எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடிவந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தொட்டகம்மனஹள்ளி அருகில் பிங்கிபுரா கிராமத்தில், பாழடைந்த வீட்டின் அருகில் எரிந்த நிலையில் பெண் சடலம் காணப்பட்டது. தகவல் அறிந்த, எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் அங்கு சென்றனர்.
அப்பகுதியில் பதிவாகி இருந்த செல்போன் டவரை ஆய்வு செய்ததில், மாயமானதாக தேடப்பட்ட சுகன்யாவின் மொபைல் போன் நம்பர், அந்த இடத்தில் இருந்ததாக காட்டியது. இதனால் எரிக்கப்பட்ட பெண், சுகன்யா என்பதை உறுதி செய்தனர்.
சுகன்யாவின் மொபைல் நம்பரை ஆய்வு செய்ததில், அவரது கணவரின் தங்கை மகன் ஜஸ்வந்த், 20, என்பவரிடம், அடிக்கடி பேசியது தெரிந்தது. நேற்று முன்தினம் அவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். சுகன்யாவை கொன்று, உடலை எரித்ததை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
சுகன்யாவிடம் இருந்து ஜஸ்வந்த் அடிக்கடி பணம் வாங்கி உள்ளார். ஆனால் திருப்பிக் கொடுக்கவில்லை. மேற்கொண்டு பணம் கேட்டதால், சுகன்யா கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் பிங்கிபுரா கிராமத்திற்கு அழைத்துச் சென்று, சுகன்யாவின் கழுத்தை நெரித்துக் கொன்று உள்ளார். காரில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பியது, விசாரணையில் தெரிய வந்தது.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
GIPHY App Key not set. Please check settings