இந்நிலையில் வீரர்கள், இன்று தனி விமானம் மூலமாக டெல்லிக்குப் புறப்பட்டுள்ளனர். இந்த விமானம் நாளை காலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து மும்பை வரும் இந்திய வீரர்கள், திறந்தவெளி பேருந்தில் டி20 உலகக்கோப்பையுடன் வலம்வருவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 17 ஆண்டுகளுக்கு டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
GIPHY App Key not set. Please check settings