“மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அது குறித்து விஜய் விரைவில் அறிவிப்பார்..” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மதுரையிலும், சிவகங்கையிலும் நடைபெற்றது.
இந்த விழாவில் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்லணை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காசோலைகளும், பொதுமக்களுக்கு தையல் மெஷின், உடைகள் என நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தளபதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நான் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் எங்களுடைய முகவரி தளபதிதான். அரசியல் தொடர்பான கருத்துக்களை அவர்தான் தெரிவிப்பார். தளபதியின் ஆலோசனை இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டோம். தளபதி மிக விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
GIPHY App Key not set. Please check settings