விஜய்யின் GOAT திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதில், மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் தோன்றுவது போன்ற காட்சிகள் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இடம்பெற்றிருக்கின்றன.
இது குறித்துப் பேசியுள்ளார் விஜயகாந்த்தின் மனைவியும், தேசிய முற்போக்கு திராவிடக் கழக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்.
“ஏ.ஐ-யில் கேப்டன் வந்ததற்கு நன்றி சொல்ல என்னைச் சந்தித்தார்கள். நான் வாழ்த்தினேன். எங்களுக்கு ஸ்பெஷல் ஷோ காண்பிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். கேப்டன் அவர்கள் வரும் காட்சிகள் நிச்சயம் சிறப்பாக இருக்கும். நான் நிச்சயம் இந்த திரைப்படத்தைப் பார்ப்பேன்.” என்றார், பிரேமலதா.
GIPHY App Key not set. Please check settings