இதற்கிடையே ‘களவு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முரளி கார்த்திக் இயக்கத்தில் ‘மோகன் தாஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் டைரக்ஷனில் ‘ஆர்யன்’ என்ற படத்திலும் நடிக்கிறார் விஷ்ணு. இதன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. விஷ்ணுவின் ஜோடியாக ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்து வருகிறார். இது ஒரு போலீஸ் கதை என்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா’வை இயக்கிய கோகுலின் கூட்டணியிலும் ஒரு படம் ரெடியாக உள்ளது. கோகுல் இப்போது சிம்புவை வைத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை முடித்துவிட்டு அவர் விஷ்ணுவின் படத்திற்கு வருவார் என்று சொல்கிறார்கள்.
விஷ்ணுவின் சகோதரர் ருத்ராவும், தமிழில் ஹீரோவாகிறார். அவர் நாயகனாக அறிமுகமாகும் படமான ‘ஓஹோ எந்தன் பேபி’யை விஷ்ணு தயாரித்து வருகிறார். இதில் மிதிலா பலர் நாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையே ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து நடிக்க விஷ்ணு விரும்பி வருகிறார் என்கிறார்கள்.
GIPHY App Key not set. Please check settings