in

கைவிடப்பட்ட சூர்யாவின் ‘கர்ணா’ – காரணம் என்ன? | Abandoned Suriya’s ‘Karna’ – Why?


சூர்யா நடிக்கவிருந்த ‘கர்ணா’ திரைப்படம் பட்ஜெட் பிரச்சினைகளால் கைவிடப்பட்டது. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த இந்திப் படம் ‘கர்ணா’. நீண்ட மாதங்களாக இப்படம் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், தற்போது இதன் பட்ஜெட் பிரச்சினைகளால் கைவிடப்பட்டுள்ளது. இதனை பாலிவுட் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ரூ.350 கோடி வரை பட்ஜெட் வருவதால், இதில் முதலீடு செய்து லாபம் ஈட்ட வாய்ப்பில்லை என முடிவு செய்துள்ளது படக்குழு. இந்தப் படத்துக்காக சுமார் ரூ.10 கோடி வரை முதற்கட்டப் பணிகளுக்காக செலவு செய்துவிட்டார்கள். ஆனாலும், இப்போதே பணிகளை நிறுத்திவிடலாம் என முடிவு செய்துவிட்டார்கள். இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் ‘கங்குவா’ விளம்பரப்படுத்தும் போது சூர்யா இருவருமே ‘கர்ணா’ விரைவில் தொடங்கும் என்ற தொனியிலேயே பேசியிருந்தார்கள். தற்போது கைவிடப்பட்டுள்ளது என்ற செய்தி பலரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.





Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: `எதிர்க்கட்சிகள் இதை செய்தாக வேண்டும்…!' – திருமாவளவன் சொல்வதென்ன?

சிட்டுக்குருவிகளுக்காக சென்னையில் இயங்கும் அறக்கட்டளை – ‘மனதின் குரலில்’ விவரித்த பிரதமர் மோடி | Koodugal create awareness about house sparrows among school children PM praises mann ki baat