in

‘அனுமதியின்றி அதிகாலை காட்சிகள்; விதிகளை மீறும் தியேட்டர்கள்!’ – கண்டுகொள்ளாத தவெக அரசு? |Theatres Screening Unauthorized Early Morning Shows, Violating Rules: Is the TVK Government Turning a Blind Eye?


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், “ரசிகர்களின் பாதுகாப்புக்காகவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும்தான் தமிழகத்தில் 9 மணிக்கு முன்பான காட்சிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தவெக அரசும் 9 மணிக்கு முன்பான காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் வெளியான பெரிய படங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 9 மணிக்கு முன்பாகவே படத்தை திரையிட்டு வருகிறார்கள். கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் 2 படத்தை திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில் காலை 5:30 மணிக்கே திரையிட்டார்கள். அதை இன்ப்ளூயன்சர்களை வைத்து தியேட்டருக்கான விளம்பரமாகவும் செய்தார்கள். தென்காசி ஆலங்குளத்தில் தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி குடும்பத்துக்கு சொந்தமான ஒரு தியேட்டர் இருக்கிறது. அந்த திரையரங்கிலும் ஸ்பைடர் மேன், சர்தார் 2 போன்ற படங்களை அதிகாலையிலேயே திரையிட்டார்கள். சென்னக்குள்ளேயே இன்னும் சில திரையரங்குகள் 9 மணி காட்சிக்கான அனுமதியை வைத்தும் கொண்டு காலை 8 மணிக்கே ஷோவை ஓப்பன் செய்தார்கள்.இவர்களெல்லாம் இந்த ஷோக்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலேயே பகிரங்கமாக நேரமிட்டு விற்றார்கள். ஆனாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படத்துக்கு தமிழகம் முழுவதுமே பல்வேறு திரையரங்குகள் காலை 7 மணி முதலே ஷோவை தொடங்கிவிட்டார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என முக்கியமான ஊர்களில் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைக்கு காலை 7, 8 மணிக்கெல்லாம் ஆன்லைனில் புக்கிங் ஓப்பன் செய்து வைத்திருக்கிறார்கள். தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியின் திரையரங்கில் நாளை காலை 7 மணிக்கு ஷோவென ஆன்லைனிலேயே போட்டிருக்கிறார்கள். தியேட்டர் ஓனர்களை மட்டும் இதில் குறைசொல்ல முடியாது.

தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் முடிவெடுக்காமல் 9 மணிக்கு முன்பாக எந்த திரையரங்கிலும் படத்தை திரையிட முடியாது. Qube இல் இத்தனை மணிக்குதான் லைசன்ஸ் ஓப்பன் செய்ய வேண்டுமென தயாரிப்பாளர்கள் கூறிவிட்டால் அத்தனை மணிக்குதான் திரையரங்குகளுக்கு படமே செல்லும். அதனால் இதில் திரையரங்குகளை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. ஆனால், இந்த விதிமீறலை கண்டும் காணாமல் இருப்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும். இதைப் பார்த்து மற்ற துறையினரும் விதிமுறைகள் எளிதில் மீறும் உந்துதலைப் பெறுவர். பொதுமக்களும் இது இடையூறை ஏற்படுத்தும்’ என்றனர்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“ஸ்டாலின் ஆட்சியின் உயரங்களை 'ஸ்டிக்கர் மாடல்' அரசு வேடிக்கைதான் பார்க்க முடியும்” – TRB ராஜா