in

ஆய்வுக்கு போன இடத்தில் அரசு வாகனத்தில் ரீல்ஸ், சர்ச்சையில் சத்தியமங்கலம் தாசில்தார்!- Sathyamangalam tahsildar reels controversy.


ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் வரம்புகளை மீறி பணி நேரங்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுப்பதும் அதனை சோசியல் மீடியாக்களிலும் பகிர்வதும் அண்மைக்காலமாகத் தொடர்ந்து வருகின்றன.

அந்த வரிசையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தின் வட்டாட்சியர் ஜமுனா ராணி, அண்மையில் ஆய்வு பணிகளுக்காக கடம்பூர் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

தாசில்தாருக்கான அரசு வாகனத்தில் சென்ற அவர், நடுவழியில் சாலையில் வாகனத்தை நிறுத்தி கடம்பூர் மலை அழகைக் கண்டு ரசித்திருக்கிறார். அதோடு நிற்காமல் “ஜவ்வாது பெண்ணானது’ என்கிற சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து அதை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கிறார்.

வட்டாட்சியர் ஜமுனா ராணி

வட்டாட்சியர் ஜமுனா ராணி

‘மாவட்டத்தில் ஆட்சியருக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய வட்டாட்சியர் ஒருவர் பணி நேரத்தில் வரம்புகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு உயர் அதிகாரிகள் முறையாக நெறிமுறைப்படுத்த வேண்டும்’ எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

‘அரசு எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே’ என கமெண்ட்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ‌.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

உள்நோக்கத்துடன் நடவடிக்கை?– லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சஸ்பென்ஷனுக்கு இடைக்கால தடை

இடைத்தேர்தலி ஸ்​டா​லின் நிற்​ப​தற்​கோ, பொது​ வேட்​பாளர்​களை நிறுத்​துவதற்கோ மறுப்பு.! – மு.வீரபாண்டியன் | Live Updates | June 30 2026 Todays News update and Breaking news