நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் (யுஜி) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்படும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது.
நீட் வினாத்தாள் கசிவு விவாகரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. சமூக வலைதளம் மூலம் பிரபலமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
இச்சூழலில், இந்த தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரைத்துள்ளது. அதன்படி மத்திய அரசு அந்த செயலிக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:



GIPHY App Key not set. Please check settings