ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.



GIPHY App Key not set. Please check settings