in

கழிவறையில் கசிந்த விஷவாயு; 3 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் அதிரடியாக களமிறங்கிய புதுச்சேரி அரசு! | Puducherry Govt set up chambers in all houses over the death due to leakage of poisonous gas in toilet


புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. கடந்த 11-ம் தேதியன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த செந்தாமரை என்கிற மூதாட்டி, தன் வீட்டு கழிவறைக்குச் சென்றபோது மூச்சு திணறி மயக்கமானார். நீண்ட நேரமாகியும் திரும்ப வராத செந்தாமரையைத் தேடி கழிவறைக்குச் சென்ற அவரது மகள் காமாட்சியும் மூச்சு திணறி சுருண்டு விழுந்தார். அதே நேரத்தில் வெவ்வேறு வீடுகளில் கழிவறைக்குச் சென்ற +1 படிக்கும் மாணவி செல்வராணி, பாலகிருஷ்ணன், பாக்கியலட்சுமி போன்றவர்களும் மயக்கமாகி அங்கேயே விழுந்தனர். நீண்ட நேரமாகியும் இவர்கள் வெளியே வராததால் கழிவறை கதவுகளை உடைத்துச் சென்ற உறவினர்கள், அவர்கள் மயங்கி கிடந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

சேம்பர்கள் அமைக்கும் பணிசேம்பர்கள் அமைக்கும் பணி

சேம்பர்கள் அமைக்கும் பணி

ஆனால் அவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அலறியடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். அதனால் அந்த தெருவே கலவர பூமியாக காட்சியளித்தது. அதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலம் மயக்கமானவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பாலகிருஷ்ணன், பாக்கியலட்சுமி இருவரையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள், செந்தாமரை, காமாட்சி, சிறுமி செல்வராணி உள்ளிட்ட மூவரும் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் அங்கு விரைந்த போலீஸார், யாரும் கழிவறையை பயன்படுத்த வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

`போலீஸைக் கைதுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது!’ – சத்தியஷீலா வழக்கில் கவலை தெரிவித்த நீதிபதி! | high court madurai branch expressed its displeasure inspector sathiyasheela case

சர்ச்சைக்குள்ளான நியூயார்க் மைதானம் முற்றிலும் அகற்றம் | டி20 உலகக் கோப்பை | The T20 World Cup New York stadium is being completely demolished