தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம், நிதித்துறைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், விடுப்பிலிருந்து திரும்பியுள்ள என்.முருகானந்தம், தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்படுகிறார். இந்த பொறுப்புகளை கூடுதலாக வகித்து வந்த அமுதாவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்படுகிறார்.

இதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம்.ஏ.சித்திக், நிதித்துறை செயலராக நியமிக்கப்படுகிறார். இந்த பொறுப்புகளை வகித்து வந்த டி.உதயச்சந்திரனுக்குப் பதிலாக இவருக்கு இந்த பொறுப்பு அளிக்கப்படுகிறது.
மாநில திட்ட இயக்குநர், ராஷ்டிரிய உச்சாதர் சிக்ஷா அபியான் (RUSA) ஆகிய பொறுப்புகளை வகித்து வந்த முதன்மைச் செயலர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா, டாக்டர் கே.மணிவாசன் கூடுதலாக வகித்து வந்த சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைக்கான அரசு முதன்மைச் செயலராக நியமிக்கப்படுகிறார்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வரும் கே.நந்தகுமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். டி.கிறிஸ்துராஜ் வகித்து வந்த இந்த பொறுப்புகள் இவருக்கு மாற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.



GIPHY App Key not set. Please check settings