ஸ்டாலின் பேச்சுக்கு மு.வீரபாண்டியன் பதில்
நேற்று முன்தினம் (ஜூன் 28, 2026) திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பேசியிருந்தார்.
ஸ்டாலின் பேச்சுக்குப் பதில் தரும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பழுத்த அரசியல் தலைவர்.
கலைஞரிடம் அரசியல் பயின்றவர். இப்போதுதான் புதிய அரசு அமைந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது.

இது மக்களின் முடிவு. இதை மதிக்க வேண்டும். ஜனநாயக முறையில் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என அவர் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல.
இடைத்தேர்தலில் ஸ்டாலின் நிற்பதற்கோ, திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவான பொதுவான வேட்பாளர்களை நிறுத்துவதற்கோ மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை” என்று பேசியுள்ளார்.



GIPHY App Key not set. Please check settings