கொச்சி- தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இயற்கை எரிவாயுக்கு மாறுவதுடன், தென்மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் தடையின்றி இயற்கை எரிவாயு வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பெரு நகரங்களில் மட்டும் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) விநியோகம் செய்யும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான பணிகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொச்சி முதல் தூத்துக்குடி வரை கன்னியாகுமரி வழியாக இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (ஐஓசிஎல்) மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியுள்ளது.




GIPHY App Key not set. Please check settings