
“தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிரான வெறுப்பு அலை வீசி வருகிறது” என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கேசவன் கூறினார்.
மதுரையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலை தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என திசை திருப்பி வருகிறார். இந்த தேர்தலில் மையப்புள்ளியாக இருப்பது திமுகவின் மெகா ஊழல் ஆட்சி தொடர வேண்டுமா அல்லது ஊழலற்ற நல்லாட்சி வர வேண்டுமா என்பது தான். திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி இருண்ட ஆட்சி. இதுபோன்ற ஆட்சியை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை.



GIPHY App Key not set. Please check settings