in

`எள்ளு எது… கொள்ளு எது எனத் தெரியாதவர் ஸ்டாலின்!' – தேனியில் எடப்பாடி பழனிசாமி தாக்கு

[ad_1]

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தேனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்

பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 39 திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் தமிழகத்திற்கு எந்தத் திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தென்தமிழக மக்களின் நீராதாரமாக இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 152 அடி நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை கேரள அதிகாரிகள் தடுத்து வழக்கும் போட்டார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இங்கு 65 சதவிகித விவசாயிகள், விவசாய தொழிலாளிகள் உள்ளனர். அவர்கள் குறித்து எந்த கூட்டத்திலும் ஸ்டாலின் பேசியது இல்லை. விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறார். கறவை மாடுகள், ஆடுகள் வழங்கிய திட்டத்தை ரத்து செய்தார். அம்மா கிளினிக், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழக்கும் திட்டம், லேப் டாப் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தார். நாங்கள் உருவாக்கிய ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை செயல்படவிடாமல் வைத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

காலை மதுரையில் உள்ள சந்தை பகுதிக்கு சென்றேன். அங்கு அரிசி விலை கிலோவுக்கு 15 ரூபாய் உயர்ந்திருப்பதாகவும், அனைத்து உணவுப் பொருள்களின் விலையும் 40 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

விவசாயிகளைப் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும். ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வராக இருக்கிறார். கொள்ளு எது, எள்ளு எது எனத் தெரியாத முதல்வர். அவரிடம் பத்து வகை தானியங்களைக் காட்டி ஒவ்வொன்றும் என்ன தானியங்கள் என்று கேட்டுப் பாருங்கள், தெரியாது. என்னை பச்சை பொய் பழனிசாமி என்கிறார். செல்லும் இடமெல்லாம் என்மீது அவதூறு பரப்புகிறார். அதிமுக-வை கேலி கிண்டல் செய்கிறார். ஆனால் திமுக செய்த நலதிட்டங்களை கூறவில்லை. ஆனால் நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்லக்கூடிய வகையில் திட்டங்களை செய்துள்ளோம். ஸ்டாலின்தான் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். எங்களை பற்றி பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மெய்யாக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி பாஜக-வுக்கு பயந்து இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் பாஜக மட்டுமல்ல எந்தக் கட்சியாக இருந்தாலும் பயப்பட மாட்டோம். நீங்கள்தான் ஆட்சியில் இல்லாத போது மோடிக்கு கறுப்பு கொடி காட்டினீர்கள். ஆட்சிக்கு வந்ததும் வெள்ளை கொடி காட்டினீர்கள். ஏன் அரசு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த மோடிக்கு கறுப்பு குடையை காட்டினால் கோபித்து கொள்வார் என வெள்ளை குடையை பிடித்தார். அவருக்கு எங்களை பற்றி பேச தகுதியில்லை” என்றார்.

[ad_2]

Source link

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Owaisi Vs Madhavi Latha: Who’s the newbie challenging 4-time Hyderabad MP | TOI Original

Stephen Fleming is the superhero of Chennai Super Kings team who sketches in the background for their victory