
தமிழக தலைமைச் செயலாளரை மாற்றியும், பாஜக, ஆர்எஸ்எஸ். ஆதரவாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை (DVAC) தலைமை இயக்குநராகவும் நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு திமுக எம்.பி.யும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த என்.முருகானந்தத்துக்கு பதிலாக, சாய் குமாரை தலைமைச் செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இந்தத் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எவ்விதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை; மேலும், முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அப்பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எவ்விதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை.
முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருவதால், தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர் அவரே ஆவார். இத்தகைய சூழலில், 08.04.2026 தேதியிட்ட உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு, மீண்டும் தலைமைச் செயலாளராக முருகானந்தத்தை பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.




GIPHY App Key not set. Please check settings