in , , , ,

பாமக தலைவர் அன்புமணி,எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் சந்தித்து வாழ்த்து பெற்றார்……..

அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்……

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, அன்புமணி வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் ஜோசப் விஜய்யை வரவேற்று உபசரித்தார்.

அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அன்புமணியுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்னர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, இன்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பெண் எம்.எல்.ஏ. & அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார் சிவகாசியின் தவெக வேட்பாளர்………

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து வாழ்த்து பெற்றார்……….