சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.175 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் இந்திய அளவில் மட்டும் ரூ.95 கோடியை வசூலித்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் நேற்று (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியானது.
அறிவியல் – புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், முதல் நாளான நேற்று உலக அளவில் ரூ.175 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் படம் ரூ.95 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக முதல் நாள் வசூலை குவித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
இந்திய வசூலை பொறுத்தவரை முந்தைய ஆண்டுகளில் வெளியான ராஜமவுலியின், ‘ஆர்ஆர்ஆர்’ முதல் நாள் வசூல் ரூ.133 கோடி. ‘பாகுபலி’ 121 கோடியையும், யஷ்ஷின்‘கேஜிஎஃப் 2’ ரூ.116 கோடியையும் வசூலித்திருந்தது. அந்த வகையில் இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பட்டியலில் ‘கல்கி 2898 ஏடி’ 4ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தகது. > படத்தின் விமர்சனத்தை வாசிக்க: கல்கி 2898 ஏடி Review: ‘ஹாலிவுட் லெவல்’ கனவு பலித்ததா, பல் இளித்ததா?



GIPHY App Key not set. Please check settings