in , ,

சதிவேலையால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டு ……

மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்….

 “ஒருசில நபர்களின் சதிவேலையால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டு குறித்த புகார்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களும் ஒத்துழைக்க வேண்டும். எங்கெல்லாம் மின்வெட்டு உள்ளது, அதனை எவ்வளவு நேரத்தில் சரிசெய்கிறோம் என்பதை மின் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம்.” என மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

அகில இந்திய அளவிலான சிஐஐ கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், “சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந்தத் துறையில் அரசு எடுக்கப்போகும் கொள்கை முடிவுகள் மற்றும் அரசின் ஒத்துழைப்பு குறித்து விளக்கமளித்தோம்.

எங்கெல்லாம் மின்வெட்டு உள்ளது, அதனை எவ்வளவு நேரத்தில் சரிசெய்கிறோம் என்பதை மின் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம். தவறான நபர்கள் வேண்டுமென்றே ஃப்யூஸ்களை பிடுங்கி, மின்வெட்டு ஏற்படுத்தியது குறித்த புகார்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி இருந்ததால் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி இல்லாத இடத்தில் பொது மக்கள் கண்காணிக்க வேண்டும்.

பெரம்பூரில் இரு தெருக்களில் வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. உடனே அது சரிசெய்யப்பட்டது. அப்போது சிலர் தூண்டுதலின் பேரில் மக்களை சாலைகளில் நிறுத்தி பிரச்சினை செய்தார்கள். ஒரு சில இடங்களில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின் வெட்டையும் சரி செய்கிறோம். இந்த விஷயத்தில் பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வழியாக அளிக்கப்படும் புகார்கள் மின்னகத்தின் மூலம் சரிசெய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

SIRI AI அறிமுகம்……

கலைப்பு கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல மக்களே களைத்துப் போய்விட்டார்கள் …….