in

Dinesh Karthik Sixer Show Royal Challengers Bengaluru Lost By 25 Runs Against Sunrisers Hyderabad IPL 2024 RCB vs SRH Match Highlights | கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்… சின்னசாமியில் சிக்ஸர் மழை – சன்ரைசர்ஸ் வெற்றி!

[ad_1]

RCB vs SRH Highlights: இன்றைய ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்காதவர்கள் நிச்சயம் ஒரு சிறப்பான டி20 கிரிக்கெட்டை பார்க்க கொடுத்த வைக்கவில்லை எனலாம். இருப்பினும், பார்க்காதவர்கள் கவலைப்படாதீர்கள். இந்த நவீன கால டி20 யுகத்தில் இன்னும் இதை போன்ற அதி பயங்கர போட்டிகளை அடிக்கடி காண நேரிடும் எனலாம். 

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 549 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மட்டுமன்றி ஆடவர் டி20 வரலாற்றிலேயே ஒரு போட்டியில் மொத்தமாக அடிக்கப்பட்ட ரன்கள் இதுதான். 

போராடிய தினேஷ் கார்த்திக்

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்த நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை எடுத்து கடுமையாக போராடியது, குறிப்பாக தினேஷ் கார்த்திக். ஆர்சிபி அணி 25 ரன்கள் வித்தியசாத்தில் தோல்வியடைந்தாலும், மிகப்பெரிய இலக்கை துரத்தி இவ்வளவு தூரம் வந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

மேலும் படிக்க | ஹைதராபாத் அடித்த 287 ரன்கள்… டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் – முதலிடத்தில் யார்?

டிராவிஸ் ஹெட் குவித்த விருதுகள்

சன்ரைசரஸ் சார்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102 ரன்களையும், கிளாசென் 67 ரன்களையும் அடித்தனர். அதில் டிராவிஸ் ஹெட் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடித்து போட்டியில் அதிக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்ததற்கான விருதுகளையும் வென்றார், கூடவே ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். கிளாசென் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை அடித்திருந்தார். 

சரிந்த விக்கெட்டுகள்…

இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. பவர்பிளே முடிவில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை விராட் கோலி – டூ பிளெசிஸ் ஜோடி அடித்தாலும் அதன்பின், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. 6.2 ஓவர்களில் ஆர்சிபி 80 ரன்களை எடுத்தபோது முதல் விக்கெட் விழந்த நிலையில், 10 ஓவர் முடிவில் 122 ரன்களுக்கு ஆர்சிபி 5 விக்கெட்டுகளை இழந்தது. விராட் கோலி 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 42 ரன்களும், டூ பிளெசிஸ் 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களும் எடுத்தனர். 

ஒரு போட்டியில் அதிக பவுண்டரிகள்

தனி மரமாக கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் போராடினார். அவர் 35 பந்துகளில் 7 சிக்ஸர்களையும், 5 பவுண்டரிகளையும் குவித்து 83 ரன்களை அடித்து துரதிருஷ்ட வசமாக நடராஜன் வீசிய 19வது ஓவரில் ஆட்டமிழந்தார், அவர் ஆட்டமிழக்கும் வரை ஆர்சிபி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. 

ஹைதராபாத் அணி 19 பவுண்டரிகளையும், 22 சிக்ஸர்களையும்; ஆர்சிபி அணி 24 பவுண்டரிகளையும், 16 சிக்ஸர்களையும் அடித்தனர். இதன்மூலம், இந்த போட்டியில் 33 பவுண்டரிகளும், 38 சிக்ஸர்களும் குவிக்கப்பட்டது. ஒரு போட்டியில் அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்டதும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்… பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்பு – அது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ



[ad_2]

Source link

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Watch The Music Video Of The Latest Punjabi Song Area 51 (Teaser) Sung By Inder Pandori | Punjabi Video Songs

RCB vs SRH: காயம்பட்ட சிங்கத்திடம் கர்ஜித்த ஹெட், க்ளாசன் – போர் கண்ட சிங்கமாகப் போராடிய டிகே! | IPL 2024: Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad Match Analysis