in

SM Krishnas grandson jumping into the political arena? | எஸ்.எம்.கிருஷ்ணா பேரன் அரசியல் களத்தில் குதிப்பு?

[ad_1]

லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் 28 லோக்சபா தொகுதிகளில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, ஆளுங்கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சிகளான பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணியும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இரு அணியினருக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில், பெரும் தலைவலியாக உள்ளது.

பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டை. இந்த தொகுதியின் எம்.பி., – சதானந்தகவுடா, இம்முறை போட்டியிடவில்லை என, ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இங்கு வெற்றி எளிது என்பதால், பலரும் போட்டியிட ஆர்வம் காண்பிக்கின்றனர். சீட் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் ஷோபா, முன்னாள் அமைச்சர் ரவி உட்பட சிலர் பெங்களூரு வடக்கு தொகுதியில், பா.ஜ., சீட் எதிர்பார்க்கின்றனர். தற்போது இந்த பட்டியலில், புதிய பெயர் சேர்ந்துள்ளது.

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனும், பா.ஜ.,வின் இளம் தலைவருமான நிரந்தர் கணேஷும் சீட் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரை களமிறக்கும்படி, தொகுதி தலைவர்களும் வலியுறுத்துகின்றனர்.

தொழிலில் டாக்டரான நிரந்தர் கணேஷ், தொகுதியில் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்களுடன் நல்லுறவு வைத்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


[ad_2]

Source link

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திமுக கூட்டணியில் தொகுதி, சின்னம் விவகாரத்தில் கமலுக்குச் சிக்கலா?!

‘கைதி 2’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: கார்த்தி அளித்த அப்டேட் | karthi said kaithi 2 movie will be on next year with lokesh kanagaraj