“ஆட்சி அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தவெகவினர் நினைக்கின்றனர். எந்த அளவுக்கு வேகமாக இந்த ஆட்சி வந்ததோ, அதே அளவுக்கு வேகமாக விரைவில் படுபாதாளத்துக்கு சென்றுவிடும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுக்க மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆகஸ்டு 12-ம் தேதி சவுதியில் தங்கியிருந்த 4 மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது ஈரான் கடல்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் குண்டடிப்பட்டு உயிரிழந்த மீனவர் மாவீரன்(38) உடலை மயிலாடுதுறைக்கு கொண்டுவர வேண்டும்.



GIPHY App Key not set. Please check settings