in

"சட்டமன்றத்தில் முதல் பேச்சை கன்னிப் பேச்சு என்று குறிப்பிடாதீர்கள்" – வானதி சீனிவாசனின் விளக்கம்


நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முதன்முதலாகப் பேசப்படும் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவார்கள்.

ஆனால், அப்படிக் குறிப்பிடாதீர்கள் என்றும், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன். அவருடைய பதிவு..

‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், அவ்வப்போது அவற்றைக் கவனித்து வருகிறேன். இந்தச் சட்டமன்றத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர்கள் அதிகம் உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

அவர்கள் பேசும்போது, “எனது கன்னிப் பேச்சைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிடுகின்றனர். இன்று (20.8.2026) திருவள்ளூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் டாக்டர் அருண்குமார் பேசும்போதும், தனது கன்னிப் பேச்சைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டார்.

பொதுவாக, திருமணமாகாத பெண்களை ‘கன்னி’ என்று சொல்வார்கள். சமஸ்கிருதத்தில், ‘கன்யா’ என்பது இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் சொல். ‘கன்னி’ என்ற சொல் கற்பு ஒழுக்கத்தின் அடிப்படையிலும் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2021-ல் கோவை தெற்கு தொகுதியில் வென்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்படப் பலரும் அதை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.

சட்டமன்றத்தில் முதல் முறையாக எனக்குப் பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாகச் சட்டமன்றத்தில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் வார்த்தை.

என்னைப் பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப் பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.

அதற்குப் பதிலளித்த அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் திரு. அப்பாவு அவர்கள், எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.

ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப் பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர். இது வருத்தம் அளிக்கிறது.

இப்போது சட்டப்பேரவைத் தலைவராக இருக்கும் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள், இதைக் கவனத்தில் கொண்டு, ‘கன்னிப் பேச்சு’ என்று உறுப்பினர்கள் கூறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

இனி உரையாற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“சர்கார் பேனரை கிழித்ததால் அதிமுக ஆட்சியை இழந்தது!'' – அமைச்சர் ஆனந்த் கடும் விமர்சனம்

மின்சார வாரிய கடன் டெண்டர் முறைகேடு……….