தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தமிழக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் செ.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி (வியாழன்) நடைபெற உள்ளது. இதையொட்டி, மாற்று முறை ஆவணங்கள் சட்டத்தின்படி அன்றைய தினம் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, தமிழகம் முழு
வதும் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாளில் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்குவது கட்டாயம் ஆகும்.
எனவே, அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களும் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்.




GIPHY App Key not set. Please check settings