இதனால் நிலத்தடி நீர் பாதிப்பது மட்டுமல்லாமல் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சட்ட விரோத குவாரியை தடை செய்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பில், “ இந்த விவகாரம் முதலில் விசாரணைக்கு வந்தபோது, கள்ளிக்குடி வட்டாட்சியர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத குவாரி எதுவும் நடைபெறவில்லை, என நீதிமன்றத்திற்கு தவறான அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்தபோது உத்தரவு பிறப்பித்தோம். மனுதாரரின் வழக்கறிஞர், மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டும் புகைப்படங்களை இணைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கள்ளிக்குடி உதவி வட்டாட்சியர் ஷர்மிளாவிடம் இந்தப் புகைப்படங்கள் காட்டப்பட்டன.



GIPHY App Key not set. Please check settings