அறிமுக இயக்குநர் ராஜ துரைசிங்கம் இயக்கியுள்ள படம், ‘சிங்கா’. கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சிஜா ரோஸ், மீனாட்சி ரவீந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஆதித்யா கதிர் மற்றும் மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ருத்ரம் சினிமாஸ் மற்றும் எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு மனோஜ் சின்னசுவாமி இசை அமைத்துள்ளார். அசோக் குமார் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

“சிங்கா என்பது ஒரு லாப்ரடார் நாய். தனது அழகான தோற்றத்தாலும், உணர்ச்சி மிகுந்த வெளிப்பாட்டாலும் இது ரசிகர்களின் மனங்களை ஈர்க்கும். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இருக்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.



GIPHY App Key not set. Please check settings