in , , , ,

முதல்வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து……

கமல்ஹாசன் எம்.பி……

தமிழக முதல்வர் விஜய்யை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி இன்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழக முதல்வர் தம்பி விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழகத்தை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழக அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்……