in , , , , ,

ஓடிடியில் வெளியாகிறது லீடர்….

படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பு….

லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படம் ‘லீடர்’. ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’ மற்றும் ‘கருடன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயக​னாக நடித்தார்.

சந்தோஷ் பிரதாப், ஷாம், ஆண்ட்​ரியா உள்ளிட்​டோர் இப்படத்தில் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர். ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 3 அன்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் இப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. வரும் மே 29ஆம் தேதி அன்று இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டுக்கான பருவமழை பற்றி…..

தமிழக முதல்வராக விஜய் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பு……