மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (ஏப்.28) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்.30-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் 8-ம் நாள் (ஏப்.26) இரவு மணியளவில் நடைபெற்றது.
அப்போது மீனாட்சி அம்மன் வைர ராயர் கிரீடம், நவரத்தின செங்கோலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று (ஏப்.27) மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெற்றது. பத்தாம் நாளான இன்று (ஏப்.28) சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதீகளில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினர்.

திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருந்து புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் இன்று அதிகாலையில் கோயிலை வந்தடைந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஆடி வீதியில் திருக்கல்யாண மேடை 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



GIPHY App Key not set. Please check settings